அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“கன்னியாகுமரி மாவட்டத்தில் 1712-ல் பிறந்து 1752-ல் மறைந்த புனித தேவசகாயம் அவர்களுக்கு, வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தின் போப்பாண்டவரால் ‘புனிதர் பட்டம்’ வழங்கப்படவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில், இந்தியாவில் பொது நிலையில் உள்ள ஒருவருக்கு புனிதர் பட்டம் முதல்முறையாகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இப்பெருமை முதன்முறையாகவும் வழங்கப்படுவது சிறப்புக்குரியதாகும்.
இறைபணியோடு, சாதி, மத, ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்திட பாடுபட்ட புனித தேவசகாயம் அவர்களின் பணிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகளவில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் மகிழ்ச்சிக்குரியதாகும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துளளார்.
தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் 1712-ல் பிறந்து 1752-ல் மறைந்த புனித தேவசகாயம் அவர்களுக்கு, வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தின் போப்பாண்டவரால் ‘புனிதர் பட்டம்’ வழங்கப்படவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 14, 2022
மேலும் அவரின் ஒரு டிவிட்டர் பதிவில், “பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன்.
நெஞ்சில் உறுதியும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல பெருமைகளை தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெற்றுத்தர செல்வி.ஜெர்லின் அனிகா அவர்களை வாழ்த்துகிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துளளார்.
பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் குழுப் போட்டிகளிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி மகிழ்கிறேன். (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 14, 2022