சென்னை:தொழில் நுட்பக்கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாத்திட மாநில ஆதிதிராவிடர் ஆணையம் அமைக்க அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி சமூக நீதிக்காக்க அயராது பாடுபட்டுவரும் தங்களை இச்சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது. மேலும், அம்பேத்கரின் மார்பளவு சிலை அமைத்திட இச்சங்கம் எண்ணுகிறது. இதற்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.