இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 24 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டோனி பின் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் இங்கிலாந்தின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தன்னுடைய மனுவில் தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு 3 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணியிடங்களில் “பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதை போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும். எனவே, அதன் அடிப்படையில் டோனி பின்னுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தீா்ப்பளித்தனா்.