முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும், 2 முறை உலக கோப்பை வின்னருமான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், நேற்றிரவு கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது சொந்த மாகாணமான குயின்ஸ்லாந்தில் டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சைமண்ட்ஸ் ஓட்டிய கார் விபத்துக்குள்ளாகியது. சம்பவ இடத்திலே 46 வயது மதிப்புத்தக்க ஆண் இறந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
காவல் துறை கூற்றுப்படி, இரவு 11 மணிக்கு ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்றுகொண்டிருந்த கார், சாலையை விட்டு வெளியேறி உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பலத்த காயமடைந்த 46 வயது ஓட்டுநரை காப்பாற்றுவதற்கான எமர்ஜென்சி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், காயம் காரணமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸின் பேட்டிங் சராசாரி 40.61 ஆகும். அவர் ஓயிட் பால் விளையாட்டில் மிகவும் பிரபலமானவர்.
அதேபோல், 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 6 சதமும், 30 அரை சதமும் அடித்துள்ளார். ஆஃப் ஸ்பீன் மற்றும் மிடியம் பேஸ் பவுலிங் மூலம் 133 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
2003 உலக கோப்பையின் ஆரம்ப ஆட்டத்திலே, பாகிஸ்தானுக்கு எதிராக ஆண்ட்ரூ சைமண்டஸ் காட்டிய ஒன் மேன் ஷோ வெற்றிக்கு வழிவகுத்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 143 ரன்கள் விளாசினார். இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்று ஆஸ்திரேலியா அணி கோப்பையை தட்டிச்சென்றது.
மேலும், 2007 உலகக் கோப்பை வெற்றியிலும் சைமண்ட்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை வென்றது.
இதுதவிர, 14 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய சைமண்ட்ஸ், 337 ரன்களும், 8 விக்கெட்களும் எடுத்துள்ளார்.
முன்பு இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் ரோட் மார்ஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மார்ச் மாதத்தில் ஷேன் வார்னே உயிரிழந்தார்.தற்போது, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்துள்ளார்.
3 மாதத்தில் 3 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2008 இல், பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை சைமண்ட்ஸ் தவறவிட்டார். போட்டி தொடர்பாக கலந்தாலோசிக்க மீட்டிங் ஏற்பாடு செய்த சமயத்தில், சைமண்ட்ஸ் மீன்பிடிக்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், 2009 20-20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, மதுபானம் தொடர்பான அணி விதிகளை மீறியதற்காக அவர் ஒழுங்குபடுத்தப்பட்டார்.
ட்ரெட்லாக்ஸ் டிசைன் மூடியும், முகத்தில் சிங்க் கிரீமும் பூசிக்கொள்ளும் சைமண்ட்ஸ் எப்போதும் ஆஸ்திரேலியா அணியில் தனிச்சையான தோற்றத்தை கொண்டிருப்பார்.