“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
டெர்ம் பாலிசி பத்தி திருவள்ளுவர் எழுதுன குறள் இது.
ஓய்வு பெற எண்ணியிருக்கும் வயதுக்கு மேல் ஆயுள் காப்பீடு தேவையில்லை (60 முதல் 65 வயது வரை போதும்), விபத்தில் இறந்தால் இரட்டிப்புக்காப்பு எனும் Rider தேவையில்லை.
Express Pay (மொத்த ப்ரீமியத்தையும் 8-10 வருடங்களில் கட்டி முடிப்பது) Return of Premium (கட்டின பணம் திரும்பக் கிடைக்கும்) போன்ற Riderகள் அனாவசியமானவை.
வெறும் டெர்ம் பாலிசி போதும் என்பவர்களுக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் ல போய் Critical Illness Coverage, Permanent Disability Coverage போன்றவை எடுக்கலாம்.
நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்போர் Critical Illness Coverage மட்டும் டெர்ம் பாலிசியுடன் எடுக்கலாம்.
இதெல்லாம் பல பேர் பலமுறை சொன்னாலும் கேக்காம போய் எடுக்கறீங்க. சில பல வருடங்கள் ப்ரீமியமும் கட்டறீங்க.
ஞானோதயம் மொதல்லயே வரணும், காலம் கடந்து வரும் ஞானோதயத்தால் பிரயோசனமில்லை. இப்ப வந்து பழைய பாலிசியை கைவிட்டு புதுசா எடுக்கலாமான்னு நிறைய பேர் கேக்கறாங்க.
1. Express Pay எடுத்து மொத்த ப்ரீமியத்தின் 25-50% ஏற்கெனவே கட்டி இருப்பீங்க, இப்ப அதைக் கைவிட்டா மொத்தமும் நஷ்டமாகும்
2. கடந்த 1-2 ஆண்டுகளில் டெர்ம் பாலிசி ப்ரீமியம் அதிகரித்து விட்டது. பழைய பாலிசி எடுத்ததுலேருந்து இப்ப உங்க வயதும் அதிகரித்திருக்கிறது. 35 வயது. 40 ஆண்டுகாலம்னு நீங்க எடுத்த பாலிசி ப்ரீமியத்தை விட இப்ப 40 வயது, 20 ஆண்டுகளுக்கு அதிக ப்ரீமியம் கொடுக்க நேரிடலாம்
3. ஏற்கெனவே இருக்கும் பாலிசிகளின் விவரங்களை புது பாலிசியின் விண்ணப்பத்தில் கொடுக்கணும். நீங்க கொடுக்கலேன்னாலும் நிறுவனம் எளிதில் கண்டு பிடித்துவிடும். ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி இருக்கும் போது உங்க வருமானத்துக்கு இன்னுமொரு கோடிக்கு பாலிசி கிடைக்காது. அப்ப பழைய பாலிசியை Lapse ஆக விட்டுத்தான் புது பாலிசி எடுக்க முடியும்
4. பழைய பாலிசியை Lapse ஆக விட்டு புது பாலிசி எடுக்கப் போகும் போது உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதை இருப்பது தெரியவரலாம். அப்படி இருந்தால் பாலிசியே கிடைக்காமல் போகலாம்
5. டெர்ம் பாலிசியில் காப்பீட்டின் அளவை அதிகரிக்க முடியாது. 5 லட்சம் வருமானம் இருந்த போது 1 கோடிக்கு பாலிசி எடுத்திருப்பீங்க, வருமானம் 10 லட்சமாக அதிகரித்ததும் 2 கோடிக்கு காப்பீடு தேவைப்படும். இதற்கு காப்பீடு வருடா வருடம் அதிகரிக்கும் Increasing Coverage Term Insurance எடுக்கலாம் அல்லது இருக்கும் 1 கோடி பாலிசியுடன் புதிதாய் இன்னொரு பாலிசி எடுக்கலாம். பழைய பாலிசியை கைவிட்டு புது பாலிசி எடுப்பது ரிஸ்க். உங்க உடல் நிலையில் மாற்றமில்லை, கண்டிப்பா பாலிசி கிடைக்கும் என்று நம்பினால் மட்டுமே அவ்வழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆக, தேவையில்லாத ஆணிகளுடன் டெர்ம் பாலிசி எடுத்து சில பல ஆண்டுகளுக்கு பின் செய்தது தவறு என்று புரிந்தாலும் எவ்விதமான பயனும் இல்லை என பேஸ்புக்கில் பாஸ்டன் ஸ்ரீராம் என்பவர் டெர்ம் பாலிசி குறித்து விளக்கியுள்ளார்.
Disclaimer
Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
Do you know what Thiruvalluvar said about term policy?
Do you know what Thiruvalluvar said about term policy? டெர்ம் பாலிசி குறித்து திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?