நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்திற்கான புதிய வளாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய நீதிபதி ரமணா, சுதந்திரத்திற்குப் பிறகு நவீன இந்தியாவின் தேவைக்கு ஏற்ப நீதித்துறையினர் உட்கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்று கூறினார்.
மாவட்ட நீதித்துறையே, நீதியின் அடித்தளம் என்று குறிப்பிட்ட அவர், அடித்தளம் வலுவாக இருந்தால்தான் ஒட்டுமொத்த அமைப்பும் செழிக்க முடியும் என்றார். இந்தியாவின் நீதி வழங்கும் முறை மிகவும் சிக்கலானதாகவும், செலவுமிக்கதாகவும் இருப்பதை சுட்டிக்காட்டினார். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மக்கள் தங்களின் உரிமைகள், கண்ணியம் காக்கப்படுவதை உணரவேண்டியது அவசியம் என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா திடீர் தடை – ஜி7 நாடுகள் எதிர்ப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM