தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 12ந்தேதி நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி பாங்காக்கில் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கியது.
இதில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
#BigBreaking || 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று மாபெரும் சாதனை.!#India #champions #Indonesia #ThomasCup #TeamIndia pic.twitter.com/8XmSe28BMq
— Seithi Punal (@seithipunal) May 15, 2022
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றியால் நம் நாடு பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்த அவரின் வழுத்துச் செய்தியில்,
“சரித்திரம் படைத்த இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது! எங்கள் திறமையான குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்திய அணிக்கு ஒரு கோடி ருபாய் பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளது.
The Indian badminton team has scripted history! The entire nation is elated by India winning the Thomas Cup! Congratulations to our accomplished team and best wishes to them for their future endeavours. This win will motivate so many upcoming sportspersons.
— Narendra Modi (@narendramodi) May 15, 2022