பல மாநிலங்களில் வீசும் வெப்ப அலை; ராஜஸ்தானில் ‘ரெட் அலர்ட்’.! 119 டிகிரியை தாண்டியதால் மக்கள் அவதி

புதுடெல்லி: வடமாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ராஜஸ்தானில் 119 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிட்டது. அதனால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. தலைநகர் டெல்லியில் 47 டிகிரி, ஜம்முவில் 43.5 டிகிரி, அரியானாவில் 46.8 டிகிரி, பஞ்சாப்பில் 46 டிகிரி, ராஜஸ்தானில் 48.5 டிகிரி (119.3 டிகிரி பாரன்ஹீட்) என்ற அடிப்படையில் வெப்பக்காற்று வீசுகிறது. அதனால் ராஜஸ்தானின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அறிக்கையின்படி பார்த்தால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெப்ப அலை வீசும் என்று எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் ெடல்லிக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1951ம் ஆண்டிக்கு பின்னர் டெல்லியில் ஏப்ரல் மாத சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரியாக பதிவானது. நாளை டெல்லியில் இடியுடன் கூடிய மழை அல்லது புழுதிப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மே 16 (நாளை) முதல் மே 18 வரை சில இடங்களில் ஆலங்கட்டி புயலுடன் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.