லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கி நடந்துவருகறது. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம் எனப் பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் கமல்ஹாசனோடு அடுத்து தான் இணைய உள்ள படம் பற்றிக் கூறினார். மதுரையைக் களமாக வைத்து கமல் சார் நடிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் எனக் கூறினார்.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “கமல் 60 பங்ஷன் அப்போ, கமல் சார் முன்னாடி அவர்கூட நடிக்கணும் கேட்டேன். இப்போ அது நடந்துருச்சு, அடுத்து ஒரு வேண்டுகோள் சார் … உங்க டைரக்சன்ல நடிக்கணும்னு ஆசை சார்.13 வயசுல கமல் சாரோட நம்மவர் படத்துல நடிக்கிறதுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். இப்போ சேர்ந்து நடிச்சது நான் செஞ்ச புண்ணியமா, என் பாட்டன் செஞ்ச புண்ணியமான்னு தெரில” என்றார்