மும்பை: “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார். அதனால் மனைவி தினம் கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
வழக்கமாக ஆசிரியர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், குடும்ப தினம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் உறவின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அந்த நாளை கொண்டாடுவது வழக்கம். இது சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் கொண்டப்படுபடுவது வழக்கம். இந்நிலையில், மனைவி தினம் வேண்டும் என தெரிவித்துள்ளார் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். “தாய் நமக்கு உயிர் கொடுக்கிறார். மனைவி தன் கணவனின் நல்ல மற்றும் தீய நேரங்களில் துணை நிற்கிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார். அதனால் மனைவி தினம் கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார் அவர்.