தாய்மொழியான தமிழை நாம் பாராட்டும் போது, அடுத்தவர்கள் தாய்மொழியை பழிப்பதோ அல்லது அவர்கள் செய்யும் தொழிலை குறைவாக பேசுவதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் ஒருவரது இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, ஆன்மீகத்தை விடுத்து தமிழ் கிடையாது என்றும், ஆன்மீகம் இல்லாத தமிழ் வளர்ச்சி இல்லை என்றும் கூறினார்.