தினம் ஒரு ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அவற்றில் சில படங்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதாக இருந்தாலும், சில படங்கள் ஆளுமையையும் குணநலன்களையும் குறிப்பதாக உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு புதிய ஆப்டிகல் இலுசியன் படம், நீங்கள் காதலில் இருக்கும் போது நீங்கள் அதிகம் பயப்படுவதை குறிக்கும் என்பதால் இந்த படத்தை பலரும் பார்த்து தங்களுக்கு என்ன தெரிகிறது என்பதைக் கூறி வருகிறார்கள்.
மாயா மாயா எல்லாம் மாயா, பார்த்துகொண்டிருக்கும்போதே அது வேறொன்றாக தெரியும், வெறொன்றாக மாறி தெரிகிற ஒன்று மீண்டும் முதல் பார்வையில் தெரிந்தது போல பழைய தோற்றத்தையே வெளிப்படுத்தும். இத்தகைய ஆப்டிகல் இலுசியன் படங்கள் பல தினமும் சமூக ஊடகங்களில் வரைலாகி வருகிறது. அவற்றில் பல படங்கள் கண்டுபிடியுங்கள் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல், இந்த படம் உங்கள் ஆளுமையையும் குண நலனையும் குறிக்கும் என்று சொல்லப்படுவதால் அத்தகைய படங்கள் இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
நீங்கள் காதலில் இருக்கும்போது நீங்கள் அதிகம் பயப்படுவதை வெளிப்படுத்தும் உன்னதமான ஓவிய மாயை ஆப்டிகல் இலுசிய படத்தை இங்கே பாருங்கள்.
பொதுவாக பயம் என்பது மனிதர்களின் இயல்பான உள்ளுணர்வு. அது உடனடி ஆபத்து மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதை நினைவூட்டுகிறது. பயம் உண்மையிலேயே இயற்கையான மற்றும் சக்திவாய்ந்த உணர்ச்சியாகும். இது நாம் செய்யும் எல்லா செயல்களிலும் உள்ளது. ஆனால், பயம் என்பது காதலில் மிகவும் ஆழமானதாக இருக்கும். யாரையாவது இழந்துவிடுவோமோ என்ற பயம், நன்றாக இல்லை என்ற பயம், காதல் தோல்வி பயம், நல்ல துணையாக இருக்க தவறிவிடுவோமோ என்ற பயம் என நிறைய பயங்கள் இருக்கிறது. காதலில் ஈடுபடும் போது ஒருவருக்கு ஏற்படும் அச்சங்களுக்கு எல்லையே இல்லை.
காதலில் நீங்கள் அதிகம் பயப்படுவதைப் புரிந்து கொள்ளவோ அல்லது முடிவுக்கு வர திட்டவட்டமான வழி எதுவுமில்லை. ஆனால், ஒரு ஆப்டிகல் இலுசியன் படம், அது உங்களுக்கு எப்படி தெரிகிறது என்பதைப் பொறுத்து, நீங்கள் காதலில் இருக்கும்போது அதிகம் பயப்படுவதைக் குறிப்பதாகக் கூறுகிறது.
ஆணின் முகம் போலவும் இயற்கை சூழல் போலவும் இருக்கும் ஓவியத்தை ஒரு சிறுவன் கேன்வாசில் வரைகிறான். இந்த கலைப்படைப்பு உண்மையில் கலைஞர் ஓலெக் ஷுப்லியாக்கின் பிரபலமான படைப்பு. இது உங்கள் ஆளுமையையும் குணநலனையும் கூறுகிறது தெரிந்துகொள்ளுங்கள்.
முதல் பார்வையில் இந்த ஓவியம், ஆணின் முகம் போல இருக்கும் ஒன்றை ஒரு சிறுவன் கேவாஸாக பயன்படுத்துகிறான். அந்த சிறுவனைப் பார்ப்பதற்கு முன்பு, முதல் பார்வையில் நீங்கள் மனித முகத்தைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் இயல்பிலேயே கவனம் மற்றும் ஆர்வமுள்ள நபர். பிறர் உங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பும் குணங்கள் கொண்டவர்.
நிகழ்காலத்தில் சரியாக செயல்படுவதன் மூலம் கடந்த காலத்தின் மோசமான அனுபவங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்க விரும்பவில்லை என்பதையும் இது குறிக்கிறது.
இதில் எதிர்மறையான அம்சம் என்னவென்றால், உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் அடிக்கடி பயப்படுகிறீர்கள். எனவே, சண்டைக்குப் பிறகு விலகி இருப்பது சகஜம் என்று நினைக்கிறீர்கள். வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு நீங்கள் அமைதியாக அல்லது பேசாமல் இருந்துவிடுகிறீர்கள்.
மனிதனின் முகத்துக்கு படில், சிறுவனை முதலில் பார்ப்பவர்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியுடன் இருப்பார்கள், மேலும் அவர்கள் மக்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் மற்றவர்க்ளால் கவனிக்கப்பட வேண்டும் என விரும்புவதில்லை. காதலில் இருக்கும்போது பிரச்னை அதிகரித்துவிட்டது என்ற பயத்தை மறைக்க முயற்சி செய்வார்கள்.
சில சமயங்களில் நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் விரும்பும் நபர் தேவையில்லை என்று நீங்கள் உணருகிறீர்கள். சிறுவன் வரைந்த ஓவியத்தை நீங்கள் பார்த்தீர்களானால், நீங்கள் துணையை நேசிப்பவர். உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பீர்கள். ஆனால், நீங்கள் வீட்டில் தங்குவதையோ அல்லது உங்களுடன் நேரத்தை செலவிடுவதையோ விரும்புவீர்கள்.
கடைசியாக, இந்த படத்தில் இருக்கும் இரண்டு குடிசைகளைப் பார்ப்பவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள். ஆனால், அவற்றில் சில தீவிரமானவை மற்றும் கவலைக்குரியவை உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உறவில் இருகும்போது நேரடி மோதல்களைத் தவிர்க்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை விரும்பாதவராகவும் உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், இந்த படம் உங்கள் குண நலனை சரியாக சொல்கிறதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”