பெங்களூரு : கோடைக்காலம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தாலும், பெங்களூரில் முட்டை சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது.பொதுவாக கோடைக்காலத்தில், முட்டை உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். ஆனால் முட்டை சாப்பிட்டால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்பதால், உண்பதை பலரும் தவிர்ப்பர். தேவை குறைந்ததால் விலை சரிந்துள்ளது.
கோழி வளர்ப்போர் நஷ்டமடைகின்றனர்.கோழிப்பண்ணை வைத்துள்ள ஒருவர் கூறியதாவது:ஒரு முட்டை உற்பத்தி செய்ய, குறைந்தபட்சம் 4.25 ரூபாய் செலவாகும். தற்போது மொத்த விலையில், ஒரு முட்டை 3.75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதற்கு முன் பெங்களூரில், தினமும் 70 லட்சத்துக்கும் அதிகமான முட்டை விற்பனையாகும். இப்போது அந்த எண்ணிக்கை 55 லட்சமாக குறைந்துள்ளது.இதற்கிடையில் முட்டை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. விலை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். விலை சரிவால் கோழி வளர்ப்போர் நஷ்டமடைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : கோடைக்காலம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தாலும், பெங்களூரில் முட்டை சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது.பொதுவாக கோடைக்காலத்தில், முட்டை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.