மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறையின் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மதுரை – தேனி இடையிலான அகல ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.