கொழும்பு,
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்.
இது குறித்து கொழும்புவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க அவர்கள் முன்வந்துள்ளதாகவும் கூறினார்.
இலங்கையில் 21-வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அறிக்கை நாளை வெளியிடப்படலாம் என்று கூறியுள்ளார்.