முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான யோசனையாக அமையவில்லை. : சென்னை அணி கேப்டன் டோனி

மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. பிளே ஆப் ரேஸ்-யில் இருந்து சென்னை அணி ஏற்கனவே வெளியேறியுள்ளது

இன்று நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின . 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது .
பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது ;
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான யோசனையாக அமையவில்லை .முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது   கடினமாக இருந்தது. . குஜராத் அணியின் சாய் கிஷோர்  நன்றாக பந்து வீசினார் . இளம் வீரரான (சென்னை அணியின்)  பதிரனா  மிக சிறப்பாக பந்து வீசுகிறார், அவர் நிலையான வேகத்தில் பந்துவீசினால் அவர் பந்துவீச்சில்  அடிப்பது கடினமாக இருக்கும்.என்று டோனி தெரிவித்துள்ளார்    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.