ஐபிஎல் : லக்னோ அணிக்கு சரிவு : புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை, 
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன .
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியால் 13 போட்டிகளில் 8 வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி அடைந்த லக்னோ தற்போது 13 போட்டிகளில் 8 வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.