காங்., தலைவர்கள் முன்னிலையில்கேக் வெட்டிய சிவகுமார்| Dinamalar

காங்கிரஸ் தேசிய முதன்மை செயலர் பிரியங்கா உட்பட பலரின் முன்னிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு, நேற்று 60 வது பிறந்த நாள். அவருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்., மேலிட தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா உட்பட, பலர் வாழ்த்து தெரிவித்தனர்.ராஜஸ்தானின் உதய்பூரில், காங்கிரஸ் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சிவகுமார், கட்சியின் தலைவர்கள் முன்னிலையில், கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.