நீலகிரியில் சுற்று சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சுற்று சூழல் ஆர்வலர்கள்-தனியார் அமைப்புடன் இணைந்து வனப் பகுதியில் வீசப்பட்ட சுமார் 30 டன் காலி மதுபாட்டில்களை சேகரித்தனர்.
சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் காலி மதுபாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுசூழல் மாசுபடுவதுடன், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள 76 டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மது பாட்டில்களில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பயன்படுத்திய பின்னர் காலி பாட்டில்களை கொடுத்து கூடுதலாக செலுத்திய 10 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.