வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு 244கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே ஜனாதிபதியின்பொதுமன்னிப்பின் கீழ் இவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களை புரிந்து தண்ட ப்பணம் செலுத்த முடியாத கைதிகள், 65 வயதுக்கும் மேற்பட்டோர் .மேல் நீதிமன்றங்களால் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில், 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்தவர்கள் ஆகியோரே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்ய ப்பட்டுள்ளனர்.