தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கியிருப்பது இந்தியாவிற்கே பெருமை! ஜி.கே.வாசன் கருத்து.!

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயம் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கே பெருமை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயம் அவர்களுக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இதனால் உலக அளவில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறது.  

‘அதிகரிக்கும் கஷ்டங்களைத் தாங்குதல்’ என்று அழைக்கும் புனிதர் பட்டத்தைப் பெற்ற முதல் தமிழர் தேவசகாயம் என்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. 

இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் நேற்று மே 15, 2022 அன்று வழங்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் கிராமத்தில் 1712ம் ஆண்டு, ஏப்ரல் 23 – ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் பிறந்தார். கடவுள் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை நிலைநாட்ட பெரிதும் விரும்பினார். 

தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் அவர்கள் புனிதர் பட்டத்துக்கு தகுதியானவர். காரணம் தென்னிந்தியாவில் பரவலாக ஒரு தியாகியாக கருதப்பட்டார். மேலும் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறித்தினார். 

குறிப்பாக தேவசகாயம் அவர்கள் மேற்கொண்ட இறைப்பணிக்கும், மக்கள் நலப்பணிக்கும் கிடைத்திருக்கிற பட்டம் புனிதர் பட்டம். 

தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கியதால் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், ஏன் இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறது.  

உலக அளவில் தமிழ் நாட்டின் புகழ் பரவுகிறது. புனிதத்துவத்தோடு வாழ்ந்து மறைந்த புனிதரான தேவசகாயத்தின் புகழ் பரப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.