சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் 20ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.