கனடாவில் சாதிப் பெயரைச் சொல்லி இளைஞரை அழைத்த இளம்பெண்: வெளிநாடு சென்றும் தொடரும் அவலம்…


இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய கமிட்டியின் தலைவரான அம்பேத்கர், இந்துக்கள் பூமியின் மற்ற இடங்களுக்கு புலம்பெயர்ந்தால், இந்திய சாதிப்பிரச்சினை உலகப் பிரச்சினையாக மாறிவிடும் என்றாராம்.

அது உண்மைதானோ என்று தோன்றுகிறது இந்த செய்தியைப் படித்தால்…

கனடாவுக்குப் படிக்கச் சென்ற ஒரு இளைஞரை, சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக அழைத்தாராம் ஒரு இளம்பெண்.

நீ இப்போது இந்தியாவிலிருந்திருந்திருந்தால் கம்பி எண்ணப் போயிருப்பாய் என்றாராம் Gurpreet Singh என்ற அந்த இளைஞர்.

கனடாவில் சாதிப் பெயரைச் சொல்லி இளைஞரை அழைத்த இளம்பெண்: வெளிநாடு சென்றும் தொடரும் அவலம்...

கல்வி கற்பதற்காக கனடாவின் ஒன்ராறியோவுக்குச் சென்ற Gurpreet, கனடாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள தன் சக இந்தியர்கள் தங்கள் சாதி கௌரவத்தையும் தங்களுடன் கொண்டு வரத் தவறவில்லை என்கிறார்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவரான Gurpreet, பல முறை தனது பெயரை மாற்றிச் சொல்லியிருக்கிறாராம். காரணம் அவரது சாதியை அறிந்துகொள்வதற்காக அவரது முழுப்பெயரையும் கூறும்படி பலர் தன்னை வற்புறுத்தியதாக தெரிவிக்கிறார் அவர்.

வெளிநாட்டுக்குத் தனிமையாக வந்த இடத்தில் சாதியைக் காட்டி தன்னை ஒதுக்கிவிடக்கூடாது என்று பயந்து, வேறு பெயர்களைச் சொல்லியதாக தெரிவிக்கிறார் அவர்.

கனடாவில் சாதிப் பெயரைச் சொல்லி இளைஞரை அழைத்த இளம்பெண்: வெளிநாடு சென்றும் தொடரும் அவலம்...

வெளிநாடு சென்றும் இன்னமும் இந்த சாதிப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை!

எந்த அளவுக்கு என்றால்…

அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான California மாகாண பல்கலைக்கழகம், பாகுபாடு காட்டுதல் தொடர்பான கொள்கைகளில் ஜாதி தொடர்பான பாகுபாடு காட்டக்கூடாது என்பதையும் இணைத்துள்ளதாம்.

அதேபோல, கனடாவின் Ottawaவில் Carleton பல்கலைக்கழக கல்வி கற்பிக்கும் ஊழியர்கள் கூட்டமைப்பும், கடந்த நவம்பரில், தனது கொள்கைகளில் பாகுபாடு காட்டுதல் தொடர்பான கொள்கைகளில், ஜாதி தொடர்பான பாகுபாடு காட்டக்கூடாது என்பதை இணப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாம்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.