இனி தொடர்வது எங்கள் மதிப்புக்கு இழுக்கு… McDonald's எடுத்த முக்கிய முடிவு

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடரும் நிலையில், ஃபாஸ்ட்ஃபுட் உணவக சங்கிலியான மெக்டொனால்டு  நிறுவனம் திங்களன்று தனது ரஷ்ய வணிகத்தை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது. நிறுவனம் ரஷ்யாவில் 850 உணவகங்களைக் கொண்டுள்ளது, இதில் 62,000 பேர் பணியாற்றுகின்றனர். உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மற்றொரு பெரிய மேற்கத்திய நிறுவனம் மெக்டொனால்டு.

போரினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக் காட்டிய  மெக்டொனால்ட் நிறுவனம், ரஷ்யாவில் வணிகம் செய்வது இனி மெக்டொனால்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று கூறியது.

சிகாகோவை தளமாகக் கொண்ட நிறுவனம் மார்ச் மாத தொடக்கத்தில் ரஷ்யாவில் அதன் கடைகளை தற்காலிகமாக மூடுவதாகக் கூறியது. ஆனால் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

ரஷ்யாவை சேர்ந்தவர் இந்த நிறுவனத்தை வாங்கும் போது, இந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக நிறுவனம் திங்களன்று கூறியது. விற்பனை முடிவடையும் வரை ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதாக நிறுவனம் கூறியது. நிறுவனத்தை வாங்குபவர் யார் என்ற அடையாளத்தை McDonald’s வெளிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

மெக்டொனால்டுக்கு அதிக அளிவிலான ஊழியர்கள் இருப்பதாலும்,  நூற்றுக்கணக்கான ரஷ்ய சப்ளையர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில் இந்த முடிவு கடினமானது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கிறிஸ் கெம்ப்ஜின்ஸ்கி கூறினார். “இருப்பினும், ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கருத்தில் கொண்டு,  உலகளாவிய சமூகத்தின் மீது எங்களுக்கு பொறுப்பு காரணமாக, மேலும் நாங்கள் எங்கள் மதிப்பை இழக்காமல் இருக்க இதனை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி… ஜெர்மனியை மிரட்டும் ரஷ்யா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.