பாலிவுட் வாரிசுகள் அவித்த முட்டைகள்.. சர்ச்சையாக பேசிய கங்கனா !!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் வலம் வருகிறார். இவர் எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தன் கருத்தை கூறி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர். 

குறிப்பாக, பாலிவுட் சினிமாவில் நிகவும் Nepotism அதாவது பாலிவுட் சினிமாவில் உள்ள மிக பிரபலமான நட்சத்திரங்களின், புகழ், பெயரைப் பயன்படுத்தி அவர்களது உறவுகள் சினிமா துறைக்கு வருவது குறித்து கங்கனா எப்போதும் விமர்சித்ததுண்டு. 

அந்த வகையில், கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கங்கனா அதைக்குறித்து கூறுகையில், பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளிடம் பார்வையாளர்களை ஈர்க்கும், அவர்களிடம் இணைந்துபோதும் குணம் இல்லாமையே, இந்தி திரைப்படங்கள் தென்னிந்திய திரைப்படங்களிடம் தோற்றுப்போக காரணம்.

kankana ranawath

கொரோனா ஊரடங்கு காலம் முடிந்தநிலையில், வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் இந்தி திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் வெளியான சினிமா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தன. ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எஃப். 2 திரைப்படங்கள் ரூ. 1000 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனால், இந்தியில் வெளியான சினிமாக்கள் பெரிதாக வசூல் ஆகவில்லை.

இதற்கு பார்வையாளர்களுடன்/ ரசிகர்களுடன் இளம் பாலிவுட் நட்சத்திரங்கள் பெரிதாக தொடர்படுத்திக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நடிப்பு இல்லை என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

kankana

தொடர்ந்து இது தொடர்பாக பேட்டியளித்த அவர், இந்தி சினிமா துறையை பொறுத்தவரை, பிரபலங்களின் மகன்கள் வெளிநாடுகளுக்குப் படிக்க சென்றுவிடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள். ஹாலிவுட் படங்கள் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் கத்தி மற்றும் நைஃப் வைத்துதான் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அவர்களின் பேச்சு வித்தியாசமாக இருக்கிறது. 

kankana ranawath

இப்படி இருப்பவர்களால், இந்தி மக்கள், ரசிகர்களுடன் எப்படி தொடர்படுத்திக்கொள்ள முடியும்? இங்கிருக்கும் மக்களுக்கு இப்படிப்பட்ட நட்சத்திரங்களுடம் எப்படி தங்களுடன் இணைத்து தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்? பாலிவுட் வாரிசுகள் வேக வைத்த முட்டைகள் (boiled eggs) போல இருக்கிறார்கள்; நான் யாரையும் தவறாக சித்திகரிக்க வேண்டும் என்பதற்காக கூறவில்லை, என்று கூறினார். இந்த பேச்சு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.