சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி கே சிங் முன்னிலையில், தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த திட்டத்தின்படி துறைமுகம் – மதுரவாயல் இடையே 5 ஆயிரத்து 855 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20.56 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஈரடுக்கு உயர்மட்ட சாலை சாலைக்கு பிரதமர் மோடி வருகின்ற இருபத்தி ஆறாம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.