கோதுமையின் விலை திங்களன்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது, கோடை கால வெளியில் உற்பத்தியை பாதித்ததால் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தியா முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தை துவங்கியதும் ஒரு டன்னுக்கு 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் போர் கோதுமை உற்பத்தியில் பெரிய அளவிலான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதி
2019 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி 8.14 பில்லியன் டாலராக இருந்தது, உக்ரைன் சுமார் 3.11 பில்லியன் டாலர் கோதுமையை ஏற்றுமதி செய்தது. தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான போரின் காரணமாகக் கோதுமை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு உருவாகி விலை அதிகரித்துள்ளது.
இந்திய அரசு தடை
இந்நிலையில் இந்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் கோதுமையைச் சேர்த்து உள்ளது. இந்தத் தடை மூலம் இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அண்டை நாடுகளுக்கும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் உதவி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
அனுமதி தேவை
மேலும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும், தத்தம் அரசின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
துருக்கி
இதற்கிடையில் முதன்முறையாக இந்தியாவில் இருந்து 50,000 டன் கோதுமையைத் துருக்கி ஆர்டர் கொடுத்துள்ளது. இது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் அதே வேளையில், இது நாட்டில் கோதுமை விலையை மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது.
விலை உயர்வு
ஏற்கனவே உணவு பொருட்களுக்கு அதிகளவிலான தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்தியாவின் தடை சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகவே ஐரோப்பிய சந்தை துவங்கியதும் ஒரு டன் கோதுமை விலை 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.
கோதுமை விலை 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.
Wheat prices hit record high after Indian export ban
Wheat prices hit record high after Indian export ban வரலாற்று உச்சத்தைத் தொட்ட கோதுமை விலை.. மத்திய அரசு அறிவிப்பின் எதிரொலி..!