நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் '12த் மேன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லாலின் ’12த் மேன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றதால், மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி ‘12த் மேன்’ படத்தில் இணைந்துள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

’த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ போன்றே த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘12த் மேன்’ படத்தை மலையாள முன்னணி தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘ப்ரோ டேடி’ தயாரிப்பாளரும் ஆண்டனி பெரும்பாவூர் என்பது குறிப்பிடத்தக்கது. அனில் ஜான்சன் இசையமைக்க, சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்துள்ளார். மோகன்லாலின் ‘ப்ரோ டேடி’, ‘ஆரட்டு’ உள்ளிட்டப் படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், ‘12த் மேன்’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மே 20 ஆம் தேதி வெளியாகிறது.

image

மோகன்லால்- ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம் 2’ படமும் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.  இதே மே 20-ஆம் தேதி உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ தியேட்டர்களில் வெளியாகிறது. இதனுடன் ஷிவானி செந்தில் இயக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படமும் தியேட்டர்களில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.