பொதுவாக இன்றைய கால இளைஞருக்கு பலருக்கு நரை முடி என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் நமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த மெலனின் குறைவதால் தான் இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி வருகிறது என்று கூறப்படுகிறது.
அதோடு மரபணுக்கள் மூலமும், வைட்டமின் பி 12 போன்ற சில குறைபாடுகள் மூலமும் நரை முடி வரக்கூடும்.
நரை முடி கருப்பாக, நரை முடி வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சில எளிய வழிகளை இங்கே பார்ப்போம் வாருங்கள்.
- நீங்கள் இயற்கையான காபி பொடியை பயன்படுத்தலாம். அரைத்த காபி துகள்கள் உங்கள் நரை முடியை தற்காலிகமாக அடர் பழுப்பு நிறத்தில் மாற்றி விடும்.
- எலுமிச்சை சாறு முடிக்கு பளபளப்பை அளிக்கிறது, மேலும் முடி ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டும் எளிதில் கிடைக்கக்கூடிய வீட்டு பொருட்களாகும். எனவே இவை முன்கூட்டிய நரை முடியை அகற்ற உதவும்.
- நரை முடியை தவிர்க்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் ஒரு சிறந்த வழியாகும். இது முடியை கருமையாக்கும் கேடலேஸ் என்கிற நொதியின் அளவை உயர்த்துகிறது. இது கூந்தலுக்கு பளபளப்பையும் அளிக்கிறது.
- உங்கள் தலைமுடிக்கு கருப்பு விதை மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இவை புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி பளபளப்பாக இருக்கவும், முடி கருமையாக இருக்கவும் உதவுகிறது.
- நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் ஆகியவற்றின் கலவையானது நரை முடிக்கு சிறந்த இயற்கையான சிகிச்சையாகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் ஆயுர்வேதத்தில் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.