கணவரின் ‘Pay Slip’-ஐ மனைவி கேட்கலாமா? நீதிமன்ற உத்தரவை பாருங்கள்!

பொதுவாக ஆண்களிடம் எவ்வளவு சம்பளம் என்றும், பெண்களிடம் என்ன வயது என கேட்கக் கூடாது என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.

ஆனால் மத்தியப் பிரதேசத்தில் கணவனின் சம்பள விவர அறிக்கையைப் பார்க்க வேண்டும் என மனைவி தொடர்ந்த வழக்கு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு

மத்திய பிரதேசத்தின் கவாலியர் பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவி, குழந்தைகளுக்கு மாதம் 18,000 வழங்க மறுத்துள்ளார். உடனே மனைவி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தனது கணவர் அவரது சம்பள விவர அறிக்கையை காண்பிக்க மறுக்கிறார் என வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

தனியுரிமையா?

தனியுரிமையா?

அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் பெஞ்ச், உங்களது மனைவி சம்பள விவர அறிக்கையைப் பார்க்க விரும்பினால், அதனை நீங்கள் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தனியுரிமையா?
 

தனியுரிமையா?

கணவர் தரப்பில் சம்பள விவர அறிக்கை என்பது அவரது தனியுரிமை என வாதாடினர். அதற்குச் சம்பள விவர அறிக்கையைப் பார்ப்பது தனியுரிமையை மீறுவது இல்லை என்று தீர்ப்பில் தெரிவித்து இருந்தனர்.

சம்பள விவர அறிக்கையில் என்னவெல்லாம் நாம் கவனிக்க வேண்டும்?

1) அடிப்படை சம்பளம்

1) அடிப்படை சம்பளம்

உங்கள் சம்பளத்தின் பெரும் பகுதி அடிப்படை சம்பளமாகத்தான் வரும். தனிநபர்களின் சம்பளம் மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளைப் பொறுத்து சதவீதம் மாறுபடும். அடிப்படை சம்பளம் வருமான வரிக்கு உட்பட்டது என்பது முக்கியமானது.

2) வீட்டு வாடகை படி

2) வீட்டு வாடகை படி

வீட்டு வாடகை படி நீங்கள் இருக்கும் பகுதியைப் பொருத்து மாறும். மெட்ரோ நகரங்களில் இருப்பவர்களுக்கு 40 சதவீத சம்பளம் வீட்டு வாடகை படியாக கிடைக்கும். இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும்.

3) கன்வேயன்ஸ் அலவன்ஸ்

3) கன்வேயன்ஸ் அலவன்ஸ்

அலுவலக பயணம், யூனிஃபார்ம் செலவுகளுக்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் படி கன்வேயன்ஸ் அலவன்ஸ் என அழைக்கப்படுகிறது. கன்வேயன்ஸ் அலவன்ஸில் 1600 ரூபாய் வரையில் முழுமையாக வரி விலக்கு பெறலாம்.

 4) மருத்துவ படி

4) மருத்துவ படி

ஊழியரின் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும் ஒரு நிலையான தொகை மருத்துவ படி. மருத்துவ செலவுக்கான ரசீதுகளைச் சமர்ப்பித்தால் இதில் 15,000 ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

 5) விடுப்பு பயணப் படி

5) விடுப்பு பயணப் படி

விடுப்பு பயணப் படி என்பது ஊழியர்களுக்கு விடுப்பின் போது பயணம் செய்யும் செலவுகளுக்காக வழங்கப்படுகிறது. இதற்கும் வரி விலக்கு வழங்கப்படும்.

 6) ஈபிஎப்

6) ஈபிஎப்

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு இணையாக நிறுவனத்தின் பங்களிப்பும் ஈபிஎப் கணக்கில் செலுத்தப்படும்.

 7) தொழில் வரி

7) தொழில் வரி

மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரி தொழில் வரி. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அது பிடித்தம் செய்யப்பட்டு மாநில அரசுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

 8) டிடிஎஸ்

8) டிடிஎஸ்

உங்கள் சம்பளம் வருமான வரி வரம்புக்கு அதிகமாக இருக்கும் போது பிடித்தம் செய்யப்படும் வரியே டிடிஎஸ். அதை நிறுவனங்கள் உங்கள் பான் கீழ் வங்கி கணக்கில் செலுத்திவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சென்ற நிதியாண்டின் டிடிஎஸ் பிடித்தத்தை வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pay slip salary slip

English summary

Can Wife See Husband Pay Slip? Check What Important Ruling From Court.

Can Wife See Husband Pay Slip? Check What Important Ruling From Court. | கணவரின் ‘Pay Slip’-ஐ மனைவி கேட்கலாமா? நீதிமன்ற உத்தரவை பாருங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.