அஜித்தின் ‘ஏகே 61’ படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டம்? – வெளியான மாஸ் தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் முழு வீச்சாக உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ திரைப்படத்தை, தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’  திரைப்படத்திற்குப் பிறகு, ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், 2-வது முறையாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வலிமை’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும், 200+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது. இதையடுத்து இவர்களின் கூட்டணியில் 3-வது முறையாக இணைந்து புதியப் படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அறிவிப்போடு நில்லாமல் உடனடியாக படப்பிடிப்பிற்கான பூஜை கடந்த மோதம் போடப்பட்டது. தற்காலிகமாக ‘ஏ.கே. 61’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், நெகட்டிவ் ரோலில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சற்று உடல் எடை குறைத்து, தாடியுடன் புதிய லுக்கில் அஜித் தோன்றிய புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடல்கள் என்று தனியாக எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

image

இந்நிலையில், 36 நாட்கள் ‘ஏ.கே.61’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழு திட்டமிட்டப்படி இடையூறு இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்றால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையொட்டி ‘ஏ.கே.61’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.