சமூக ஊடகங்களில் தினமும் பல ஆப்டிக்கல் இலுசியன் படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக, உற்று பார்க்கும்போது பிளாக் அண்ட் ஒயிட் ஆகவும் கலர்ஃபுல்லாகவும் மாறி தெரிந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
இது சமூக ஊடகங்களின் காலம், மனித கற்றல்கள் எல்லாமே காட்சி வழியாக கற்பது என்பதாக மாறிவருகிறது. சமூக ஊடகங்களில், தினம் ஒரு ஆப்டிகல் இலுசியன் படங்கள் வைரலாகி வருகிறது. மனதை மருளச் செய்யும் இந்த ஆப்டிகல் இலுசியன் படம், உற்று பார்க்கும்போது, கருப்பு வெள்ளையாக இருந்து கலர்ஃபுல்லாக மாறி உங்களை ஆச்சரியப்படுத்தும்.
ஆப்டிகல் இலுசியன் பட வியாபாரி, பெட்லர் டீன் ஜாக்சன் பகிர்ந்துள்ள இந்த பாலத்தின் படத்தின் நடுவில் உள்ள வெள்ளைப் புள்ளியை உற்றுப் பார்க்கும்போது, கருப்பு வெள்ளையாகவும் பிறகு, கலர்ஃபுல்லாகவும் தெரியும். நீங்கள் இந்த படத்தின் மத்தியில் உள்ள வெள்ளி புள்ளியை உற்று பார்க்க வேண்டும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது கருப்பு வெள்ளை படமாக இருந்து கலர்ஃபுல் படமாக மாறுவதைப் பார்க்க முடியும்.
இது குறித்து அறிவியல் பூர்வமாக என்ன சொல்கிறார்கள் என்றால், இது ஆஃப்டர் இமேஜ் எனப்படும் நன்கு அறியப்பட்ட நிகழ்ச்சி என்கிறார்கள். நீங்கள் 20 வினாடிகள் அல்லது அதற்கு மேல் கண்களை இமைக்கால,ஒரு பொருளைப் பார்க்கும்போது அப்படி நடக்கும். இந்த நேரத்தில், உங்கள் கண்களில் உள்ள ஒளி வாங்கும் செல்கள் ஒளியை மின் சமிக்ஞையாக மாற்றும். (இது உங்கள் மூளைக்குச் செல்லும்) இந்த சிக்னலை கொண்டுசெல்வதற்கான தேவையான ஒளிப்பிரிவுகள் தீர்ந்துவிட்டதால் சிக்னல் நிலைக்கு ஏற்ப உங்கள் மூளை ஒளியை ஈடுசெய்கிறது.” என்று கூறுகின்றனர்.
எப்படியானாலும், இந்த படம் உற்று கவனிக்கும்போது கருப்பு வெள்ளையாக இருந்து கலர்ஃபுல் படமாக மாறுவதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“