பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு நீதிக்கோரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (16) பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது
செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்
காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.