வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் சேலம், தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.