இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 462 பேருக்கு வேலை; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

ICAR recruitment 2022 for 462 Assistant vacancies apply soon: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் நாடு முழுவதும் உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மொத்தம் 462 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022 ஆகும்

உதவியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 462

ICAR தலைமையிடம் – 71

ICAR நிறுவனங்கள் – 391

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ICAR தலைமையிடம் – ரூ. 44,900

ICAR நிறுவனங்கள் – ரூ. 35,400

தேர்வு செய்யப்படும் முறை :இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability), பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம்.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு, கொள்குறி வகை மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வாக நடைபெறும். கொள்குறி வகை வினாக்கள் கணிதம் மற்றும் ஆங்கில பகுதிகளில் இருந்து இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: தேர்வே இல்லாமல் 38,926 பேருக்கு வேலை: தபால் துறை பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு (UR/OBC-NCL(NCL)/EWS) ரூ. 1,200; SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1112997689749164086469.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.