பாகிஸ்தான்: மதவழிபாட்டு தலம் அருகே குண்டு வெடிப்பு – ஒருவர் பலி

லாகூர்,
பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் ஹரெடார் பகுதியில் சந்தை மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது.
இந்நிலையில், மத வழிபாட்டு தலம் அருகே இன்று இரவு 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது யார்? பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலை அரங்கேற்றினவா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.