பாகிஸ்தானில் மதவழிபாட்டு தலம் அருகே குண்டு வெடிப்பு.. ஒரு பெண் பலி..!

பாகிஸ்தான் கராச்சி மாகாணத்தில் மதவழிபாட்டு தலம் அருகே உள்ள சந்தைப் பகுதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஹரெடார் பகுதியில் சந்தை மற்றும் அதன் அருகே மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில், சந்தை பகுதியில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.