1992-ல் ‘ரோஜா’ திரைப்படத்தில் இணைந்த இருவரும் இணைந்த முதல் படத்திலேயே தேசிய விருதுகளைக் குவித்தனர். ‘சின்ன சின்ன ஆசை…’, ‘புது வெள்ளை மழை…’ போன்ற பாடல்கள் இருவரின் கூட்டணியைக் கொண்டாட வைக்கிறது.
நவீன இசைக் கருவிகளுடன் இசையமைத்த நகரத்து இளைஞனுக்கு கிராம பாணியில் இசையமைக்கத் தெரியுமா? என்ற சந்தேகங்களை உடைத்தது பாரதிராஜாவின் `கருத்தம்மா’ படத்தில் இடம்பெற்ற ‘போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு’ எனும் பாடல்.
‘கிழக்கு சீமையிலே’ படத்தில் ‘தென் கிழக்குச் சீமையிலே…’, ‘ஆத்தங்கர மரமே…’ போன்ற பாடல்கள் தமிழ் சினிமாவில் இது வரை கேட்டிராத பல புதிய ஒலிகளை கொண்டுவந்து கிராமங்களை நவீன இசையோடு இணைத்தப் பாடல்கள்!
‘இந்திரா’ எனும் படத்தில் ‘தொட தொட மலர்ந்ததென்ன..’ எனும் பாடல் மெல்லிசையை இசையாலும் வரிகளாலும் கற்றுவெளியில் நிரப்பியப் பாடல்களாகும்.
அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தில் வெளியான ‘உயிரே உயிரே…’, மலரோடு மலர் இங்கு..’ போன்ற அனைத்து பாடல்களும் அப்படத்தையே வேறு தளத்திற்குக் கொண்டு சென்று திரைக்கதைக்கு வலுசேர்த்த பாடல்களாகும்.
1998-ல் வெளியான ‘உயிரே’ படத்தில் ‘தைய தைய…’, ‘பூங்காற்றிலே..’, ‘ஒரு பூக்கள்…’ போன்ற பாடல்கள் காதலர்களின் தேசிய கீதமாக மாறியப் பாடல்களாகும்.
‘திருடா திருடா’ படத்தில் கல்யாணம் செய்து போகும் காதலிக்காக பாடும் ‘ராசாத்தி…’ பாடலில் பிரிவின் துயரத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள் வைரமுத்து-ரஹ்மான்.
கே.பாலச்சந்தரின் ‘டூயட்’ எனும் படத்தில் வைரமுத்து-ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘என் காதலே என் காதலே…’, அஞ்சலி… அஞ்சலி.. போன்ற பாடல்கள் காதலின் வலியை கேட்பவர்களின் உயிரில் கடத்தும் பாடல்களாகும்.
எளிமையான இசையில் மெட்டுக்கள் பிரமாண்டமாக இல்லாமல் வைரமுத்துவின் வரிகள், ரஹ்மானின் இசையால் மட்டும் உருகவைத்த ‘உன்னோடு நானிருந்த….’ கவிதை இருவரின் இசையும், வரியும் பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்திருப்பதற்கு ஓர் உதாரணமாகும்.
அதையடுத்து காதல் கொண்டாட்டத்தின் உச்சம் தொடும் ‘ரட்சகன்’ படத்தில் இடம் பெற்ற ‘சோனியா சோனியா..’, ‘சந்திரனை தொட்டது யார்…’ போன்ற பாடல்கள்.
‘ஜோடி’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் கடிதம் கேட்கவே..’, ‘பொய்யாவது சொல்…’, ‘வெள்ளி மலரே…’, ‘அஞ்சாதே ஜீவா…’ போன்ற பாடல்கள் காதலின் ஆரம்பம், கொண்டாட்டம், பிரிவு, என அனைத்தையும் உள்ளடைக்கிய வெரைட்டியான கிளாசிக் பாடல்களாகும்.