இலங்கை மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும்.
முதலாவது இன்னிங்க்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி சற்று முன்னர் 2 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ,இலங்கை அணி 397 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளது.
பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் (15) சட்டோகிராமில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரரும் அணித்தலைவருமான கருணாரத்ன 9 ஓட்டங்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஒஷாடா பெர்னாண்டோ 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குசால் மெண்டிஸ் அரை சதமடித்து 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சண்டிமால் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து 66 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 153 ஓவரில்அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக மேத்யூஸ் நிதானமாக வியையாடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணி சார்பில் நயீம் ஹசன் 6 விக்கெட்டுகளையும்இ ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும் ம் வீழ்த்தினர்.
இதையடுத்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களை பெற்றது.