ரயில் படியில் பயணம் செய்தபோது தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்த போது படியில் பயணித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில் மறைமலை நகரைச் சேர்ந்த ஜேசுரான் துரை என்பவர் மறைமலை நகரிலிருந்து குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக ரயிலில் வந்தபோது, ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தவறி விழுந்தாரா இல்லை கம்பியில் மோதி கீழே விழுந்தாரா என விபத்திற்கான காரணம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM