அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும்- பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி:

தொலைத்தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்யின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

விழாவில் அஞ்சல்தலை ஒன்றை மோடி வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி. தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-ஜி சோதனை கருவியை வெளியிட்டார்.

21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 450 பில்லியன் (ரூ.34 லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களாக உயர்த்தும்.

நாட்டுக்கு சொந்தமான 5ஜி தர நிலைய 5ஜி வடிவில் உருவாக்கியுள்ளது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். கிராமங்களுக்கு 5ஜி தொழில் நுட்பத்தை கொண்டு செல்வதில் இது பெரும் பங்கு வகிக்கும். நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முக்கியமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வணிகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர போகிறது.

இது விவசாயம் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். இது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 4ஜிக்கு நாடு வெளிப்படையாக இருக்கிறது.

தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200க்கும் மேல் விரிவடைந்துள்ளது.

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக உள்ளது. ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தால் இந்தியாவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.