நொய்டா இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்க காலக்கெடு மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு

உத்தர பிரதேசம், நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுர கட்டிடங்களை இடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடிபாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் அகற்றப்படும் என்று நொய்டா ஆணையம் தரப்பு பதில் தெரிவித்துள்ளது.

நொய்டா செக்டார் 93ஏ பகுதியில் சூப்பர்டெக் நிறுவனத்தின் இரட்டை 40 மாடி கோபுரங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. சூப்பர்டெக்கின் எமரால்டு கோர்ட் ஹவுசிங் சொசைட்டிக்குள் கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரமுள்ள இரட்டைக் கோபுரங்கள் மே 22-ம் தேதிக்குள் அகற்ற ஏற்கனவே  உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இடிபிஎஸ் எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தை இடிப்புக்காக நியமித்த நிறுவனம் மே 22ம் தேதிக்கான காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் கோரியது.

இதுதொடர்பான மனு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான டி.ஒய் சந்திரசூட் மற்றும் பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனை குண்டுவெடிப்பு அறிக்கையை மேற்கோள் காட்டிய இடிப்பு நிறுவனம், கட்டிடம் எதிர்பார்த்ததை விட உறுதியானது. அதனால் கட்டிடங்களை இடிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரியது.

கட்டிடம் இடிப்பதற்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 28-ம் தேதியை கட்டிடம் இடிக்க புதிய காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்.. சென்னை மெரினா கடற்கரையில் சாராய பாட்டில்கள் பதுக்கி விற்பனை- 3 பெண்கள் கைது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.