புதுச்சேரியில் கொகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த நைஜீரியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில், குருசுகுப்பம் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்ட தனிப்படை போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் எலியா, ஜஸ்டின், பிரான்சிஸ் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மாணவர் விசாவில் வந்துள்ள அவர்கள் மூவரும் போதை தரும் மெத்திலீன் டையாக்ஸி மாத்திரைகள், கொகைன் பவுடரை டெல்லியில் இருந்து வரவழைத்து விற்பனை செய்வது தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.