சென்னையில் நடுரோட்டில் உருட்டை கட்டையால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரை சேர்ந்த உசாமா என்பவர் ராயப்பேட்டை நியூ கல்லூரி வளாகத்தில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படித்து வருகிறார்.
கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சியில் பங்குபெறுவது குறித்து மாணவர்களிடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று உசாமா, அதே கல்லூரியில் படிக்கும் ரக்கியூப் என்பவரை கல்லூரி வளாகத்தில் வைத்து அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து, கல்லூரியை விட்டு வெளியே வந்த உசாமா மற்றும் அவரது நண்பரை, ரக்கியூப் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கினார்.
இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்படும் நிலையில், உசாமா, ரக்கியூபிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.