எரிபொருளை வழங்கும் போது, விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அனுராதபுர மாவட்ட விவசாயக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு, அதற்கான வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறுபோக செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதற்காக பயன்படுத்தப்படும் ட்ரெக்டர் வண்டிகளுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், விவசாயிகள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கான உடனடி தீர்வை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.