தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர் வார ஆர்.ஆர்.ஆர் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணர்வுப் பூங்காவை அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், Rehabilitation Restoration Renovation-ஐ குறிக்கும் “டிரிப்பில் ஆர்” திட்டத்தின் படி ஏரிகள் தூர் வாரப்படும் என்றார். மேலும், இந்த ஆண்டு புதிதாக 120 தடுப்பணைகள் கட்டப்படும் என்றார்.