நியூட்டனின் மூன்றாம் விதி… நேற்று கூறிய கருத்துக்கு இன்று ஆக்‌ஷன்… ப.சி வீடுகளில் சிபிஐ சோதனை

இந்தியாவில் வேறு எந்த பிராந்திய மொழிகளிலும் இந்த அளவுக்கு மீம்ஸ்கள் வெளியாவதில்லை. தமிழகத்தில் அரசியல் குறித்தான ஆர்வம் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. அன்றாட அரசியலை மீம்ஸ்கள் உடனுக்குடன் விமர்சிக்கின்றன. சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் ஒரு அரசியல் மீம்ஸ் உடனடியாக ஆயிரக் கணக்கானோரை சென்றடைகின்றன. அதனால்தான், பொதுவான சமூக ஊடகவாசிகளும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என அனைவரும் சமூக ஊடகங்களில் அரசியல் மீம்ஸ்களைப் போட்டு தெறிக்கவிடுகின்றனர்.

தமிழகத்தில் இன்றை அரசியலை நெட்டிசன்கள் தங்கள் மீம்ஸ்கள் மூலம் கிண்டலாக விமர்சித்துள்ளனர்.

ஓவியர் சந்தோஷ் நாராயணன் கருப்பு தமிழணங்கு ஓவியத்துக்கு எதிராக நேற்று பாஜக ஆதரவாளர்கள், பாரதமாதா போல, வெள்ளை தமிழணங்கு படத்தை வெளியிட்டு ட்ரெண்டிங் செய்தனர். அதற்கு நேற்றே திராவிட இயக்க ஆதரவு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து மீம்ஸ்கள் பறந்தன.

நேற்று பிரச்னையை நேற்றோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், வெள்ளை தமிழணங்கு படத்தை ஜூம் பண்ணி பார்த்து அதில் வாட்டர் மார்க் எழுத்துகளாக இருந்த ‘ஸ’ வைக் கண்டுபிடித்து தமிழ் மொழியில் எப்போது வடமொழி எழுத்தான் ஸ- வை சேர்த்தார்கள் என்று கேள்வி எழுப்பி மீம்ஸ் மூலம் இன்றும் பஞ்சாயத்தை தொடர்ந்துள்ளனர்.

கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “ஆங்கிலம் ஒருவேளை அழியலாம், தமிழ் அழியாது… Thank u, Tnk u ஆகலாம், நன்றி, நறி ஆகாது…” என்று நாளிதழில் வெளியான ஒரு துனுக்கை பதிவிட்டு தமிழ்! தமிழ்தான் என்று மீம்ஸ் போட்டு ஃபயர் விட்டுள்ளார்.

பாஜக ஆதரவு தரப்பு வெளியிட்ட தமிழணங்கு படத்தில் ‘ஸ’ எழுத்து இடம்பெற்றது குறித்து நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “ 247 எழுத்துக்களை 248 க மாற்றிய மாதிரி… 26 எழுத்துக்களை 27 ஆக மாற்ற முடியுமா..? …funny guys # “ஸ” என்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.

இதற்கு கவுண்ட்டர் கொடுக்கும் விதமாக, பாஜக தரப்பில், “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டதற்கு, நெல்லை அண்ணாச்சி “#கலாய்ச்சிட்டாராமாம்!” என்று மீம்ஸ் மூலம் கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.

இதே போல, மோகன்ராம் கோ என்ற ட்விட்டர் பயனர், வடிவேலு குரலில், “என்ன பண்ணாரு என் கட்சிக்காரர், ரொம்ப வருஷமா 247 தமிழ் எழுத்துக்கள் மட்டுமே இதை அதிகப்படுத்த ஒரு எழுத்தை சேர்த்தது தப்பா?” என்று கேட்டு மீம்ஸால் கலாய்த்துள்ளார்.

இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையே நிலவும் மோதலை மனதில் கொண்டு, நேற்று ஆளுநரும் முதல்வரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும் அங்கே ஆளுநர் தமிழ்மொழி நாடு முழுவதும் பரபரப்பட வேண்டும் என்று பேசியதற்கு, முதல்வர் ஸ்டாலின் மைண்ட் வாய்ஸாக, “#நம்ம டயலாக் ஆச்சே” என்று நெல்லை அண்ணாச்சி மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

பாக்டீரியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவி நேருக்கு நேர் சந்தித்து வணக்கம் வைத்த புகைப்படத்தை பதிவிட்டு, “வணக்கம்… நல்லாருக்கீங்களா… நீங்க எதோ 76 IPS பேட்ஜ்ன்னு பசங்க சொன்னாங்க… நா 76 MISA பேட்ஜ்…!” என்று தெறிக்கவிட்டுள்ளார்.

கலியுக கண்ணன் என்ற ட்விட்டர் பயனர், முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து, “என்னடா
சிக்ஸர் முதல்வருக்கு வந்த சோதனை

என்னடா…இது
எந்த பந்தை போட்டாலும்
சிக்ஸரா போவுது

தலைவரே
நீங்க பந்தை உருட்டியே விட்டாலும்
சிக்ஸர் தான் அடிப்பாரு போலிருக்கே..

நீங்க போட்ட பந்தை சிக்ஸர் அடிக்கல

அண்ணாமலை அடிச்ச பந்து எல்லாமே சிக்ஸர் தான்” மீம்ஸ் போட்டுள்ளார்.

அமைச்சர் கே.என். நேரு, “இப்போது எங்களைப் பார்த்து உங்களால் முடிந்தால் கேஸ் போட்டுக்குங்க, உள்ள தள்ளுங்க என்கிறார்கள். என் மேல 19 கேஸ் போட்டீங்க… ஒன்னு ரெண்டு இல்ல, 19 கேஸ் போட்டீங்க… அதில் 9 கேஸ் கொலை கேஸ். அதனால், அதில் இருந்து நாங்கள் வெளியே வந்து இப்போது நாங்க மந்திரியாதான் இருக்கிறோம். எனவே நீங்கள் எங்களைப் பார்த்து, கோர்ட்டில் சந்திக்கிறோம் என்று சொன்னால், நாங்களும் உங்களை கோர்ட்டில் சந்திக்கிறோம். அதில் ஒன்னும் மாற்றமில்லை.” என்று கூற இதற்கு, பாஜக ஐடி விங் மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரு வீடியோ மீம் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

நேபாளத்தில் லும்பினியில் நேற்று நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, “புத்தர் பிறந்த இடத்தில் வித்தியாசமான ஆற்றலை உணர்கிறேன்” என்று கூறியதற்கு, நெல்லை அண்ணாச்சி, “உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமடா” என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

சரவணன். M என்ற ட்விட்டர் பயனர், “மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது திமுக அரசுக்கு நல்லது” என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதற்கு, “நான் பிச்சை எடுக்கற இடத்துல வராதிங்க வராதிங்கனு எத்தனை தடவை சொல்றேன்…” என்று மீம்ஸ் முலம் கிண்டல் செய்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா இடம் ஒதுக்கீடு செய்தது குறித்து கிண்டல் செய்துள்ள சரவணன். M, “நெட்ஃப்ளிக்ஸ்ல படத்தை பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்குலாம் ஒரு எம்.பி சீட் ஒதுக்கறாங்க… என்னா ஒரு கூட்டணி தர்மம்யா..” என்று கிண்டல் செய்துள்ளார்.

மணி அமுதன். மா.பா Mani amuthan என்ற ட்விட்டர் பயனர், “நீங்க ஏன் இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீங்க…” என்ற கேள்விக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சால்வையை தூக்கி போட்ட படத்தையும் போப் ஆண்டர் பிரான்சிஸ், தமிழர் ஒருவரின் கைகளைப் பற்றி பேசுகிற படத்தையும் பதிவிட்டு பதிலடிகொடுத்துள்ளார்.

ட்விட்டர் பயனர் மயக்குநன் இன்று பதிவிட்டுள்ள அரசியல் மீம்ஸ்களில், “தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்தால் பாஜக போராட்டம் நடத்தும் என்று அண்ணாமலை கூறியதற்கு, போராட்டம் நடத்தும்போது பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படாம பாத்துக்கோங்க..!” என்று கவுண்டமணி மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

கஞ்சா குட்கா போதைப் பொருட்கள் பழக்கம் கடந்த ஆண்டுகளை விடக் குறைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு, மயகுநன், மதுரை முத்து மீம்ஸ் போட்டு, “அதா… டாஸ்மாக் விற்பனை அதிகரிச்சுட்டே போகுதோ…?!” என்று கிண்டல் செய்துள்ளார்.

தமிழக பாஜகவில் வாய்ச்சொல் வீரர்கள்தான் உள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதற்கு, மயக்குநன், ட்விட்டரில் மீம்ஸ் மூலம் “அங்க மட்டுமா…?!” காங்கிரஸிலும்தான் என்று கிண்டல் செய்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், “காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்குவது என்பது பாஜகவுக்கு உதவியாக அமைந்துவிடும்!” என்று கூறியதற்கு, ட்விட்டர் பயனர் மயக்குநன், “மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியது அதிமுகவுக்கு உதவியா அமைஞ்ச மாதிரியா?” என்று சந்தானம் மீம்ஸ் போட்டு கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.

திமுகவின் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ். பாரதி, “வாரியார் அவர்களையே ஒதுக்கியது திமுக” என்று கூறியதற்கு, ஆர்மி தீரன் அண்ணாமலை என்ற ட்விட்டர் பயனர், “வாரியார்களை காக்க வந்த வாரியர் அண்ணா” என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசின் கொள்கைகளே காரணம்… ப. சிதம்பரம் நேற்று கூறியதற்கு எதிர்வினையாக, ப. சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை இன்று… நியூட்டனின் மூன்றாம் விதி For every action… என்று நெல்லை அண்ணாச்சி மீம்ஸ் போட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.