இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் முதல் வர்த்தகப் பொருட்கள் வரையில் அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
WPI அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 10.74 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சரிவில் இந்தியா ரூபாயின் மதிப்பு.. பாகிஸ்தான் ரூபாயின் நிலை என்ன தெரியுமா..?
மொத்த விலை பணவீக்கம்
ஏப்ரல் 2022 இல் பணவீக்கத்தின் உயர்வுக்குக் கச்சா எண்ணெய், அடிப்படை உற்பத்தி உலோகங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், உணவு அல்லாத பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு தான் முதன்மை காரணமாக உள்ளது.
WPI பணவீக்கம்
2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ந்து 13வது மாதமாக WPI பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்தது சாமானிய மக்கள் முதல் உற்பத்தி நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
உணவு பொருட்கள்
காய்கறிகள், கோதுமை, பழங்கள் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் மட்டும் 8.35 சதவீதமாக இருந்தது.
எரிபொருள் மற்றும் மின்சாரம்
எரிபொருள் மற்றும் மின்சாரம் பிரிவின் பணவீக்கம் 38.66 சதவீதமாகவும், உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 10.85 சதவீதமாகவும், எண்ணெய் வித்துக்கள் பணவீக்கம் 16.10 சதவீதமாக உள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 69.07 சதவீதமாக இருந்தது. இது தான் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் அடிப்படை மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது. குறிப்பாகச் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சில்லறை பணவீக்கம்
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது, தொடர்ந்து நான்காவது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க உச்ச இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
ஆர்பிஐ
இந்தியாவில் தொடர்ந்து 4வது மாதமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, மே மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.40 சதவீதமும், ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.50 சதவீதமும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 2 நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
WPI inflation record high of 15.08% in April; crude petroleum, natural gas inflation at 69.07 percent
WPI inflation record high of 15.08% in April; crude petroleum, and natural gas inflation at 69.07 percent பெட்ரோலிய பணவீக்கம் ரொம்ப மோசம்.. இந்திய மக்கள் பர்ஸில் பெரிய ஓட்டை..!