29 ஆண்டுக்கு பின் நான்கு பேர் கைது| Dinamalar

ஆமதாபாத் : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, ௨௯ ஆண்டுகளுக்கு பின், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ௧௯௯௩ல் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் ௨௫௭ பேர் இறந்தனர்;

௭௦௦க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ௧௯௦ பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர், ஆமதாபாதின் சர்தார் நகரில் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள், அபுபக்கர், யூசுப் பட்கா, ஷோயிப் குரேஷி, சையத் குரேஷி என தெரிந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.