பரமக்குடியில் தந்தை உயிரிழந்த சோகத்தோடு +2 தேர்வை மாணவி ஒருவர் எழுதியது காண்போரை நெகிழச் செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவரது ஒரே மகளான சுரேகா +2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன் உடல்நலக்குறைவால் திங்களன்று உயிரிழந்தார். செவ்வாயன்று தந்தைக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவிருந்த நிலையில், இன்று நடந்த தேர்வை மாணவி மனவலிமையோடு தேர்வெழுதினார். தேர்வு முடிந்து மாணவி வீட்டிற்கு சென்றபிறகு அவரது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM